பாரதத்தின்
புராதனம்
நல்லறிவின்
சாதனம்
பண்பாட்டின்
மூலதனம்
அதுவே நம்
ஸநாதனம்
ஸநாதனம் !
டெங்கு போல்
மலேரியா போல்
கொரோனா போல்
ஒழிக்க வேண்டிய வியாதி,
என்று கொக்கரிக்கிறது
ஓர் அரசியல் வியாதி
சொத்தை காக்க
மகளை
மணந்தவன்
அந்த சொத்தை
தனதாக்கி
விரிவாக்கியவன்
தமிழை
விற்று
அரசியல்
பிழைத்தவன்
அவர் தம்
எச்சத்தின் மீதி
இந்த
விதண்டா வாதி!
அந்நாளில்
ஊரை தன்
வாயில் போட்டு
ஏப்பம் விட்டது ஒரு
குரூர நிதி
ஊர் பணத்தில்
அந்த குரூர நிதி
ஆனது குபேர நிதி!
அந்த
குபேர நிதியின்
பேர நிதி
இந்த குறு மதி.
சனாதனம்
உன் திரைப்படத்தின்
நடனம் அல்ல.
வைக்க.. நீக்க.
ஸநாதனம்
பாரதத்தில்
பல கோடி பேரின்
பால படனம்.
நீ நினைத்து
ஆகிடுமோ அதில்
சேதனம்!
பன்னெடும்
காலமாய்
வாழ்க்கைக்கு
வழிகாட்டும்
படலம்.
அதன் ஆழத்தை
விஞ்சாது
எந்தக் கடலும் !
அது
விஞ்ஞானம்
தொட முடியா
மெய்ஞ்ஞானம்!
இதை அறியாதிருப்பது
அஞ்ஞானம் !
வழி
வழியாய்
பாரதத்தின்
உச்சி தொட்டு
பாதம் வரை
எம்முள் ஓடும்
உதிரம்!
அதன்
ஓட்டத்தால்தான்
இயங்குகிறது
நாட்டின்
இதயம்.
காற்றை
வெளியை
ஒளியை
ஒலியை
விண்ணை
மண்ணை
மரத்தை
விலங்கை
பறவையை
மனிதனை
வணங்க வைத்த,
பேரண்ட
பூரணத்தை
அறிய வைத்த,
பிறப்பின்
காரணத்தை
புரிய
வைத்த,
மதிக்க
வைத்த
பூரணம் - எம்
ஸநாதனம்
கால காலமாய்
இந்நாடு
உலகுக்கு
அளித்து வரும்
சீதனம்,
ஸநாதனம் !
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
முற்பிறவி ஒன்றுண்டு
மறுபிறப்பும் இங்குண்டு!
இக் கருத்துக்கும் இடமுண்டு
அதன்
மறுப்புக்கு இடமுண்டு!
வலதுக்கு
இடம் கொடா
இடத்திலும்,
இடத்துக்கும்
வலம் கொடுக்கும்
வலம்
இந்த சனாதனம் !
பாவம் செய்தவன்,
தான் வாழ
பிறரை கொன்றவன்,
தான் சுகிக்க
பிறன் மனை வென்றவன்
,
மக்கள் பணத்தை
தின்றவன்,
அதை மறைத்து
தனக்குத் தானே
வெள்ளையடித்து
நின்றவன்,
பண முடிப்பை
தக்க வைக்க
தன மகளையே
கட்டியவன்
வீட்டில்
தெய்வ உபச்சாரம்
தெய்வ உபச்சாரம்
செய்து
வெளியில்
அதை அபச்சாரம்
செய்பவன்!
இவர்களின்
எத்துணை பாவங்கள் ?
அதனால்
எத்துணை விளைவுகள் ?
தண்டனையாய்
விளையும்
அத்தனையும்!
அன்று
காக்க வாராது
எத் துணையும்!!
அத்தனையும்
நீ சுமக்கும்
பாவ மூட்டை
வராது விடுமா - அவன்
தர்ம சாட்டை?
விடாது வருமா - உன்
பதவியும் உதவியும்?
சட்டத்தில் நீ
போடலாம்
பல ஓட்டை!
அதனால்
வென்றிருக்கலாம்
பலர் ஓட்டை!
ஆனால்
ஆண்டவன் காதில்
நீ மாட்ட முடியுமா - ஒரு
தோட்டை?
அவன் சக்தி
விடாது உன்
வீட்டை!
அரச குலமா
ஆண்டி குலமா
வலியவனா
வறியவனா
அறிவாளியா
அறிவிலியா
பாகுபாடின்றி
சமத்துவம்
காட்டும்
ஓர் தத்துவம்!
அதன் பெயர்
இந்துத்துவம்!
அதன் உயிர்
ஸநாதனம் .
ஆதியில்லை
அந்தமில்லை
முதல்
தெரியாது
முடிவு
கிடையாது!
நதிக்கரை
நாகரீகத்தின்
முதல் மூலதனம்
ஸநாதனம் !
சூரியனை
சந்திரனை
காற்றை
மலையை
நதியை
வழிபட்டவன்
சநாதனியே !
உன் பாட்டனாலேயே
முடியாததை
நீ
ஒழிக்க முடியுமா
தனியே?
நீயும்
உன் குடும்பமும்
தமிழகத்தை
பிடித்த
பிணியே!
உன்
கலகத்தால்
உன்
கழகத்திற்கு
இனி
சனியே!
முகலாயம்
ஒழிக்க முடியாத ஒன்றை
சாராயம்
ஒழித்து விடுமா?
வெள்ளையர்
வெல்லாததை
கொள்ளையரா
வென்று விடுவர்?
நீர் செய்வது
அதிகப்பிரசங்கித்தனம்
எம் அகராதியில்
ஓட்டு பொறுக்கித்தனம்.
இன்று
எதிர்ப்பு எழுந்தபின்
ஸநாதனம் வேறு
இந்து மதம் வேறு என்று
சிந்து பாடுகிறான்
வண்டு முருகன்!
ஆயிரம்
குடமுழுக்கு செய்ததாய்
விளம்பரம்.
பத்தாயிரம் முழுக்கு
செய்தாலும் கிடைக்காது
நல் வரம்.
உண்டி திருடி
உண்டி செய்வோர்
அறவோர்
ஆகார்!
அவர்
நல் விதமாய்
சாகார்!
சனாதனம்
தூற்றியவனை
மன்னிக்காது - அவன்
மன்னிக்காது - அவன்
சன்னிதானம்!
இது உன்
இழி செயல் கண்டு
நான் பாடும் அறம்!
கண்டும் காணாது
போனால்
நான் வெறும் மரம்!
த்ராவிடத்தின்
பொருள் கூட
தெரியாமல்
அதன் பெயரில்
பிழைப்பு நடத்துவது
பொருள் கூட்ட
மட்டுமே.
திராவிடம்
என்ற சொல்
ஸநாதனம் பிரசவித்த
சொல்!
இமயம்
வசித்தவன் உதித்த
சமயம்
சனாதனம்!
புராதனத்தில்
மலையாளும்
சங்கரன்
மலையாள நாட்டில்
அவதரித்து
நாடெல்லாம் நடந்து
ஸநாதனம்
செழிக்க செய்தான்.
அவன் தன்
குரு விடம்
சுய அறிமுகம்
செய்கையில்
உதிர்த்த சொல்.
திராவிடம்.
உன் பாஷையில்
சொன்னால்
அது வட மொழி!
என்றும் வாடா மொழி.
'போடா' மொழி அல்ல!
சொல்லை
கடன் வாங்கி
பொருளை திரித்து
அரசியல் வியாபாரம்
நடத்தினால்
ஸநாதனம் அழிந்து விடுமா?
பூனை கண்ணை மூடினால்
பூலோகம் இருண்டு விடுமா?
சனாதனம்
பழிக்கும் எந்த
உயிரும் நாதியற்று
உதிரும்!
சுடராது
உன் வீட்டு அகலும்.
போலியான
பேரும் புகழும்
உனை விட்டு அகலும்.
விடியாது உனக்கு பகலும்.
கரை பட்ட
கரை வேட்டி சடலம்
அது அடங்க
கரையை
கொடாது கடலும்!
சனாதனம்
செய்யா எந்த
நன்மையையும்
த்ராவிடம்
செய்ததில்லை.
சனாதனத்தை
தூற்றியவர்
வாழ்ந்ததாய்
சேதியில்லை.
தேர்தலில்
தேர்வடைந்த மகனாய்
இருப்பினும்
நீ
அரசியலில் என்றும்
தேர்வடையா மகன்தான்!
தமிழ்
நுணுக்கமான
மொழி!
தவறில்லாமல்
சரியாய் படி.
இனியாவது
தர்மத்தை பின்பற்றும்
அரசியல் விழை!
இல்லையேல்
வரலாற்றில்
நீ ஒரு
அரசியல் பிழை!
நீ அழிக்கும்
அறம்
உனை அழிக்க
ஒரு நாள்
பிளந்து வரும்
தூணை!
நீ தூற்றும்
நல்லறம்
உன்
அகம் அழிக்க
ஏற்றிடும் நாணை !
இது
புரம் எரித்தவன்
மீதாணை!
நல்லவை போதிக்க
நான் மணிமேகலை கண்ட
அரவணன் அல்ல !
உன்
அல்லவை கண்டு
அறம் பாடும்
சரவணன்!
No comments:
Post a Comment
I welcome your comments...